திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஆடிபூர தெப்பத்திருவிழா துவக்கம்

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 11:43 am
trichy-adipuram-festival-at-thiruvanaikaaval-akhilandeswari-jambukeswarar-temple

திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடிப்பூரத்தையொட்டி திருச்சியிலுள்ள திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் ஆடிப்பூர விழா இன்று கொடிமரத்தில் துவாஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் வைபவத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 

அதனைத்தொடர்ந்து பூரநட்சத்திரம் வரை தினசரி அம்மன் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

12நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 9ஆம்நாளன்று கோரதமும், தொடர்ந்து 12ம்நாள் மகர லக்னத்தில் ஆடிப்பூரகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இன்று ஆடிப்பூர கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்பாளை தரிசனம் செய்து மகிழந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close