நாகை: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை!

  அனிதா   | Last Modified : 27 Jul, 2019 12:43 pm
mother-commit-suicide-after-killed-2-children

நாகை மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள உத்திரங்குடி பகுதியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு ஜனனி (8), ஜெயமித்ரன் (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், தேவி  தனது குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள குட்டையில் வீசி கொன்று விட்டு அவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், குடும்ப பிரச்சனை காரணமாக தேவி குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close