அனுமதியின்றி செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சீல்!

  அனிதா   | Last Modified : 30 Jul, 2019 10:14 am
sealed-to-children-s-archive

ஈரோடு சித்தோட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். 

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் ஒரு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய அனுமதியின்றி உரிமம் பெறமால் காப்பகம் நடத்திவந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை காப்பகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், காப்பகத்தில் இருந்த 4 சிறுவர்களையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து காப்பக உரிமையாளர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close