மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி இன்று தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் அலுவல் ஆய்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஆய்வுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காஷ்மீர் விவகாரத்தால் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
newstm.in