பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  அனிதா   | Last Modified : 07 Aug, 2019 01:32 pm
flood-warning-for-the-people-of-the-bhavani-river

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தை அடுத்த பில்லூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாகிய மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  

மொத்த கொள்ளளவு 100 அடி உள்ள நிலையில் தற்சமயம் 97 அடி வரை நீர் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதி கிராமங்களாகிய தேக்கம்பட்டி, ஓடந்துறை,பாலப் பட்டி, ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் ஆகிய பகுதியில் வாழும் மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close