அத்திவரதர் தரிசனம்: அலைமோதும் பக்தர்களால் விஐபி தரிசனம் நிறுத்தி வைப்பு!

  அனிதா   | Last Modified : 08 Aug, 2019 11:10 am
athivarathar-darshan

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் விஐபி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வைபவம் முடிய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. 

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், இன்று காலை விஐபி, விவிஐபி தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், விஜபி தரிசனம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close