பொள்ளாச்சி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 வீடுகள் - 2 வயது குழந்தை மாயம்

  அனிதா   | Last Modified : 10 Aug, 2019 03:52 pm
pollachi-20-houses-flooded

பொள்ளாச்சி அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. 

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொள்ளாச்சி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே உள்ள  காண்டூர் கால்வாயில் இருந்து  திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் செல்லும் பகுதியில் மலையில் இருந்து ஒரு ராட்சத பாறை உருண்டு கால்வாயில் விழுந்தது. இதன் காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 20 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. 

அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி மரக்கிளைகளை பிடித்து தப்பினர். அப்போது குஞ்சப்பன் என்பவரது இரண்டு வயது மகள் சுந்தரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். மேலும் படுகாயமடைந்த குஞ்சப்பன் அவரது மனைவி அழகம்மாள் மகன் கிருஷ்ணன் மற்றும் இடிபாடுகளில் சிக்கிய பாப்பாத்தி , லிங்கசாமி, தனலட்சுமி உள்ளிட்டவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடுகளை இழந்த மலைவாழ் மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை சுந்தரியை அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close