கோவை கனமழை: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

  அனிதா   | Last Modified : 11 Aug, 2019 11:52 am
coimbatore-heavy-rains-transition-to-safe-places-for-people

கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாககண்டிவழி மலை கிராம மக்கள் கொண்டனூர் நடுநிலைப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தொடர் மழை காரணமாக ஆனைகட்டி அருகே உள்ள கண்டிவழி மலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினரின் வீடுகள் மிகுந்த சேதமடைந்துள்ளன. 

இதனால், பழுதடைந்த வீடுகளில் உள்ள மக்கள் கொண்டனூர் நடுநிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற கஷ்டமான சூழ்நிலையில் தங்களது உயிரை மதித்து எதிர்பாராத உதவியை செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

மேலும் கண்டிவழி மலை கிராமத்தில் மிகவும் பழுதடைந்துள்ள 20 வீடுகளுக்கு பதிலாக புதிய பசுமை வீடுகள் கட்டி தரப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close