திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் திருநங்கைகள் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
தமிழகத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் பல்வேறு அமைப்பினர் சார்பில் மரக்கன்றுகள் நட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் திருநங்கைகள் சார்பில் மா, வேம்பு, புங்கை, பாதாம், தேக்கு, கொய்யா, நாவல், மல்லிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், மாவட்ட சமூக நல அலுவலர் தமும்முனிஷா, திருநங்கை நல வாரிய உறுப்பிபினர் கஜோல் மற்றும் எஞ்சல் மற்றும் திருநங்கை சுய உதவி குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
newstm.in