நெல்லை: இன்ஜின் கோளாறால் விரைவு ரயில் நிறுத்தம் - பயணிகள் அவதி

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 09:45 am
express-train-stop-due-to-engine-disorder

நெல்லை நாங்குநேரி அருகே பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் என்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். 

பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்றுகொண்டிருந்த விரைவு ரயில் நெல்லை நாங்குநேரி அருகே வந்தபோது, என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ரயில் அங்கே நிறுத்தப்பட்டு இன்ஜின் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். 

மேலும், அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட ரயில்களும் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close