திருச்சி : இளம் பெண் கழுத்தறுத்து கொலை - கள்ளக்காதலன் கைது

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 10:36 am
trichy-young-woman-murdered

திருச்சியில் இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி உமா (32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகம் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த மாரியப்பன் அவருடைய மனைவியை கண்டித்துள்ளார். 

இதையடுத்து உமா, சண்முகத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இனி பேசவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சண்முகம், உமாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close