கோவை: இலங்கை அகதிகள் முகாமில் செய்யும் காரியமா இது ? - இருவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 09:11 am
two-arrested-for-selling-cannabis-in-sri-lankan-refugee-camp

இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா விற்பனை செய்த இருவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை அருகே பூலுவபட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில்   ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்த அகதிகள் முகாம் மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆலாந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆலாந்துறை போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில்  ஆய்வாளர் தங்கம் மற்றும் உளவுப்பிரிவு காவலர் தங்கவேலு தலைமையிலான காவல்துறையினர், இலங்கை அகதிகள் முகாமில் திடீர் சோதனையிட்டனர்.

அப்போது அதே முகாமைச் சேர்ந்த ராகன் மற்றும் தினேஷ்வந்த் ஆகியோர்  முகாம் மட்டுமின்றி பூலுவப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதோடு இருவரையும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி   சிறையிலடைத்தனர்.

மேலும் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போதைப்பொருள் தடுப்பு போலீசார், பொதுமக்களுக்கு ரகசிய எண்களை கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கியிருந்தனர்.

இதனைத்தொடரந்து கோவை மாநகரில்  கஞ்சா வியாபாரிகள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close