திருமண விழாவிற்காக  பிளக்ஸ் போர்டு  வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி! 

  கண்மணி   | Last Modified : 18 Aug, 2019 11:21 am
two-people-died-due-to-electric-shock-in-kumbakonam

கும்பகோணம் சுவாமிமலையில்  திருமண  நிகழ்ச்சிக்காக  இன்று  அதிகாலை ஃபிளக்ஸ் போர்டுவைக்கும் பொழுது பிளக்ஸ்  போர்டு சாலையில்  உள்ள டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது. இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர், படுகாயம் அடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தோஷ் என்பவரின் சகோதரி பிரியாவுக்கும்  விஜயகுமார் என்பவருக்கும் கும்பகோணம் சுவாமிமலையில் அமைந்துள்ள வசந்தம் மஹால் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. அதனையொட்டி 10க்கு 20 சைஸில் திருமணத்திற்காக முகம்மது, ஹரிஹரன், சிவா, விஜய் உள்ளிட்ட  சந்தோஷின் நண்பர்கள் பிளக்ஸ்  போர்டு  வைத்துக்  கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரக்கம்பியின் மீது பிளக்ஸ் போர்டு சாய்ந்துள்ளது.

இதில் கும்பகோணத்தை சேர்ந்த மருந்து விற்பனையாளர் முகமது,  இனாம்கிளியூரை சேர்ந்த ஓட்டுநர் ஹரிஹரன் ஆகிய 2 பேரும்  மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்த விஜய், சாக்கோட்டை சேர்ந்த சிவா ஆகிய இரண்டு பேரும்  கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

திருமண  விழாவிற்காக  பிளக்ஸ் போர்டு  வைத்த இருவர் உயிரழந்த சம்பவம் திருமண  வீட்டார் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. இச்சம்பவம் குறித்து சுவாமிமலை காவல்துறை வழக்கு  பதிந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close