10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

  அனிதா   | Last Modified : 18 Aug, 2019 06:57 pm
young-man-arrested-for-raping-10th-std-student

திருச்சி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் சர்மா (36). இவர் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் தென்றல் நகரில் நண்பர் ஒருவரின் டைல்ஸ் கடையில் டைல்ஸ் ஒட்டும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரின் மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், சர்மாவும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், சர்மா மாணவியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், குடும்ப கஷ்டத்திற்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மாணவியை காரில் அழைத்து கொண்டு எடமலைப்பட்டி புதூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாணவியை  ஆசைக்கு இணங்க சர்மா வலியுறுத்தியுள்ளார். இதற்கு மாணவி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பலவந்தபடுத்தி ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் நேற்று அவரது வீட்டில் விடுவதற்காக சென்ற போது பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். அப்போது, மாணவி தனக்கு நேர்ந்ததை கூறி அழுததையடுத்து, மாணவியின் உறவினர்கள் சர்மாவை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சர்மாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close