செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்து கொலை!

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 01:17 pm
old-man-beaten-to-death

கும்பகோணத்தில் வீட்டின் அருகே செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கும்பகோணத்தை அடுத்த இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரத்தினம் (65). இவர் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் கட்ட பிரகாஷ்  என்ற இரண்டு வாலிபர்கள் அடிக்கடி செல்போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்த போது, முதியவர் அந்த இளைஞர்களிடம்  தள்ளி நின்று பேசுமாறு கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த  பிரகாஷ் மற்றும் கட்டபிரகாஷ் ஆகிய இரு இளைஞர்களும் ரத்தினத்தை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்றனர். படுகாயமடைந்த முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரத்தினத்தின் மகன் ராமு அளித்த புகாரின் பேரில் சுவாமிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிய இரண்டு வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close