செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை: இருவர் கைது

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 08:13 pm
murder-of-elderly-man-over-phone-call-two-arrested

கும்பகோணத்தில் வீட்டின் முன்பு செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் கீழே தள்ளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரத்தினம் வயது 65. இவரது வீட்டருகே அதே பகுதியை இரண்டு இளைஞர்கள், நின்று கொண்டு அடிக்கடி செல்போன் பேசி வந்தனர். 

இதனை பார்த்த முதியவர் அந்த இளைஞர்களை வீட்டருகே ஏன் அடிக்கடி செல்போன் பேசுகிறீர்கள் என தட்டிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் மற்றொரு பிரகாஷ் என்ற இரண்டு இளைஞர்களும் ரத்தினத்தை தாக்கி கீழே தள்ளி விட்டதில் தலையில் பலத்த காயமடைந்து நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து முதியவர் ரத்தினத்தின் மகன் ராமு அளித்த புகாரின் பேரில் சுவாமிமலை காவல்துறையினர் வழக்கு பதிந்து தப்பியோடிய 2 இளைஞர்களையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் முதியவரை தாக்கி கொலை செய்த இருவரையும் சுவாமிமலை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். விசாரணையில் முதியவர் ரத்தினத்திற்கு கல்லூரி பயிலும் மகள் உள்ளதாகவும், பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக் கூடாது என்று ரத்தினம் இருவரையும் கண்டித்ததாகவும், அப்போது ஆத்திரத்தில் முதியவர் ரத்தினத்தை கீழே தள்ளி கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close