50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி!

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 02:25 pm
water-tap-made-by-50mg-gold

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா 150 மி.கி.தங்கத்தில் குழாயில் இருந்து இரண்டு துளி நீர் வெளியேறுவது போல் வடிவமைத்து உள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிகட்டு விளையாட்டு வேண்டும் என்பதை  வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை , எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம்,இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின்  முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

தற்போது மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 150 மி.கி.தங்கத்தில் குழாயில் இருந்து இரண்டு துளி நீர் வெளியேறுவது போல் வடிவமைத்து உள்ளார்.இதனை செய்ய ஒரு நாள் ஆனதாகவும் மழை நீரை சேகரிக்க மக்கள் முன்வர வேண்டும் எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்கியதாக அப்போது தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close