கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு!

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 12:03 pm
rowdy-arrested-for-molesting-16-year-old-girl-in-coimbatore

16வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். போலிசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, தோண்டப்பட்ட குழியில் விழுந்து ரவுடியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

கோவைமாவட்டம் ராமநாதபுரம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி கடந்த 17ஆம் தேதி காணாமல் போனார். சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில்  தொடர்புடைய அதேப்பகுதியை   சேர்ந்த ஜோஸ்வா(29) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. 

கடந்த 4 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த சிறுமியை மீட்டதுடன், ரவுடி ஜோஸ்வாவை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வா மீது 3 கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வாவை , காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக சாலையில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்ததால் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதையடுத்து, ஜோஸ்வா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கிழக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close