இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 02:05 pm
indian-army-and-air-force-to-be-ready-police-commissioner

கோவையில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் கேட்டுகொண்டுள்ளார்.

இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்று, தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பல் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோவை மாவாட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 2 ஆயிரம் போலீசார் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தீவிரவாதிகள் என வெளியான இரண்டு புகைப்படங்களும் காவல் துறையினரால் வெளியிடவில்லை  என கூறினார்

மேலும், கோவில்கள், மால்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என தெரிவிதுள்ள  ஆணையாளர், இந்திய இரானுவம் மற்றும் விமானப்படையை தயார் நிலையில் இருக்க கேட்டுகொண்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close