கொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்!

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 08:49 am
snake-with-deadly-poison

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கிணற்றுக்குள் கிடந்த கொடிய விஷம் கொண்ட கழுதை விரியன் பாம்பை  தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். 
 
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்  விவாசாயி சுந்தரம். இவரது வீட்டின் பின்புறம் 20 அடி ஆழமுள்ள  கிணற்றுக்குள் இருந்து உஷ் உஷ் என்று சத்தம் வருவதை கேட்டு கிணற்றின் உள்ளே பார்த்த போது,  பாம்பு இருப்பதை கண்டுஅதிர்ச்சியடைந்தார்.

பின்னர்  இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள்  பாம்பு பிடிப்பதில்பயிற்சி பெற்ற வீரா்கள் உதவியுடன் பாம்பை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை உயிருடன் பிடிப்பதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். 

சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட,  கோதுமைநிறத்துடன் கூடிய  அந்த பாம்பு கொடிய விஷம்கொண்டது  என்பதால் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close