கோவை: இந்து இயக்கங்களின் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 12:08 pm
coimbatore-more-security-for-prominent-leaders-of-hindu

கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக எழுந்த தகவலையடுத்து, இந்து இயக்கங்களின் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் தற்போது வரை மாநகர போலீசார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தீவிரவாத ஊடுருவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து முன்னணியைச் சேர்ந்த மூகாம்பிகை மணி உட்பட 12 இந்து இயக்க தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close