கோவையில் தொடர்கதையான சந்தன மரக் கடத்தல் !

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 01:37 pm
continued-sandalwood-trafficking-in-coimbatore

கோவை ஆர்.எஸ் புரத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே கோவையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. 

இந்நிலையில், ஆர்.எஸ் புரம் பெரியசாமி  சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்கள் இருவரது வீட்டில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியை காவல்துறையினர் துவக்கியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close