திருச்சி: முதுகலை மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 01:54 pm
trichy-postgraduate-medical-student-commits-suicide

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்து வந்த மருத்துவ மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் கயல்விழி. திருச்சி அரசு மருத்துவமனையிலும் மருத்துவராக பணியாற்றி வரும் இவரது கணவர் சேலம் அரசு மருத்துவமணை மருத்துவராக உள்ளார். 

கயல்விழி தனது  முதுகலை மருத்துவப்படிப்பிற்காக திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்றுவருகிறார். இந்நிலையில் கயல்விழி  கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கயல்விழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close