திருச்சியில் 1 லட்சம் பனை விதைகள் நடுவதற்கான துவக்க விழா!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 03:16 pm
inauguration-of-1-lakh-palm-seeds-planting-in-trichy

திருச்சியில் 1 லட்சம் பனை விதைகள் மற்றும் 50ஆயிரம் மரக் ன்றுகள் நடவு துவக்க விழா புள்ளம்பாடி  பேரூராட்சியின் வளம் மீட்புப் பூங்காவில் நடைபெற்றது.
 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பேரூராட்சியில் ஜல்  சக்தி அபியான்  திட்டத்தின்  கீழ்   1  லட்சம் பனை விதைகள்  மற்றும்  டிசம்பர் 10 -2019 க்குள் 50 ஆயிரம் மரக் கன்றுகள் பேரூராட்சி பகுதியில் நடவு செய்யப்பட உள்ளது. 

அதன் துவக்கமாக  புள்ளம்படி பகுதியில் உள்ள  பெரிய ஏரி,  பூ உடையான் ஏரி,  புள்ளம்பாடி வாய்க்கால்  பகுதிகளில்  இன்று முதற்கட்டமாக  2,500 பனை விதைகள், 2,500 மரக்கன்றுகளை பள்ளி மாணவ மாணவிகள், ஊராட்சி முன்னாள்  பிரதிநிதிகள், லயன்ஸ் கிளப்  மற்றும்  அரசு  துறை அலுவலர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள்  ஒருங்கிணைத்து நடவு செய்தனர்.
 

இதில் வேம்பு, நாவல் , அரசன் , பலா , மகிழம் ,கொய்யா , புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி  பேரூராட்சி  செயல்  அலுவலர்  சாகுல்  அமீது  தலைமையில் நடைபெற்றது.  இதில் திருச்சி மண்டல பேரூராட்சியின்  உதவி  இயக்குநர்  (பொ) இரா. மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close