திருச்சி: வருடத்திற்கு 3 முறை மட்டுமே நிகழும் சூரியனின் சிவ வழிபாடு!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 04:00 pm
trichy-thiruverumbur-sun-worship

திருச்சி திருவெறும்பூர் அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சர்க்கார் பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார் பாளையத்தில் இளைப்பாறியதாகவும், அப்போது கரிகால சோழன் கனவில்தோன்றிய  இறைவன் அவ்விடத்தில் கோவில் அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோவில் கட்டியதாகவும், அதனையடுத்தே கல்லணை கட்டப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோயிலின் சார்பு கோவிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது. வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7,8 மற்றும் 9ம்தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாகப்படும். 

இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.  இந்நிலையில் ஆவணி மாதம் 7ம் நாளான இன்று (24ம்தேதி) காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சூரியக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து காசிவிஸ்வநாதர் மூலவரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது. 

அதனை தொடர்ந்து அதனையடுத்து விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.  3நாட்கள் சூரியோதயத்தின் போது வழிபாடு நடைபெறுவதால் ஆலயத்தில் தங்கி வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close