இஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

  கண்மணி   | Last Modified : 24 Aug, 2019 05:53 pm
plan-to-monitor-sand-conduction-with-isro-assistance-union-minister-prakash-javadekar

வனப்பகுதிகளை ஓட்டி இருக்கும் பகுதிகளில் கனிமவளங்கள்  சுரண்டப்படுவது  மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது எனவும், இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் மாபியா கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி கூடத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் மிகவும் முக்கிய பணியை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.  மேலும் இந்தியாவில் குறிப்பாக 40 மில்லியனாக இருந்த கழுகு இனம் தற்போது 1000ஆக குறைந்துள்ளது எனவும், இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

அதோடு 2021ல் உலக இடம்பெயர் பறவைகள் மாநாடு இந்தியாவில் நடத்த உள்ளோம் என கூறிய அவர்,  அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்க பல மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் வனப்பகுதியை ஒட்டிய கனிமவளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது எனவும் இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம் இதன்மூலம், மாபியா கொள்ளை தடுக்க முடியும் என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close