சேலம்: மாரியம்மனுக்கு  500 கிலோ நெய் அபிஷேகம் !

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 06:41 pm
salem-500-kg-of-ghee-anointed-for-mariamman

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோவிலில்  ஆடி திருவிழாவை ஒட்டி 500 கிலோ நெய் அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து  ஆடி மாதம் இறுதியில் தேர் உற்சவம் பூர்த்திக்காக நெய்யபிஷேகம் இன்று நடைபெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க மாரியம்மனுக்கு நெய்யபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் 500 கிலோ நெய்யை கொண்டு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் குழந்தை பேறு இல்லாதவன்களுக்கு விரைவில் குழந்தைபேறு உண்டாகும் என்பது ஐதீகம். எனவே திரளான பக்தர் அம்மனுக்கு அபிஷேகம் செய்த நெய்யை வாங்கி சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close