கும்பகோணம் :  ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்  மகா கும்பாபிஷேகம்!

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 03:07 pm
kumbakonam-shri-sundareswarar-temple

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்  மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அடிப் பிரதட்சணம் செய்து வேண்டினால் நினைத்த காரியம் கை கூடும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜையுடன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாள்தோறும் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து  இன்று ஸ்ரீ மீனாட்சி அம்மபாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close