திருச்சியில் தொழிலதிபர் கடத்தி கொலை - காவல்துறையினர் விசாரணை

  கண்மணி   | Last Modified : 30 Aug, 2019 09:48 am
businessman-abducted-and-murdered-in-trichy

திருச்சியில் தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி வரகனேரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் ( 55 ). பைனான்சியரான இவர் பலருக்கு பணம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு அவர்  காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.காரை அவருடைய ஓட்டுனர் பிரபு ஓட்டி சென்றுள்ளார்.அப்போது சோமசுந்தரத்தை பழைய பால் பண்ணை அருகே மர்மநபர்களால்  கடத்தபட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். 

 சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்த  கார் ஓட்டுநர் பிரபு, தங்களை கண்களை கட்டி கடத்தி சென்று  விமானநிலையம் அருகே விட்டதாகவும் தான் கண்விழித்து பார்த்தபோது  சோமசுந்தரம் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது சோமசுந்தரம் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சோமசுந்தரம், கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சோமசுந்தரத்தின் உடல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கொலை சம்பவம் குறித்து காந்திசந்தை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close