கும்பகோணம் :  அமெரிக்க பொறியாளர் வீட்டில் கொள்ளை!

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 03:06 pm
us-engineer-s-house-robbery-in-kumbakonam

சுவாமிமலையில் அமெரிக்க பொறியாளர் வீட்டில் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட 2 லட்சம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.     

கும்பகோணம் சுவாமிமலை காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர் முத்தையா மகன் அருணாச்சலம், இவரது மனைவி மீனாட்சி அருணாச்சலம். அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அருணாச்சலம் சுவாமிமலையில் உள்ள தனது வீட்டை தனது மைத்துனர்  மேல வீதியில் வசிக்கும் நெடுஞ்செழியன் மகன் சிவகுமார் வயது 28 என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். 

பூட்டிய வீட்டை சிவகுமார் தினசரி காலை, மாலை ,வந்து பார்த்துச் சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அமெரிக்க பொறியாளர் அருணாச்சலம் வீட்டை மர்ம ஆசாமிகள் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று, உள்ளே இருந்த பீரோ உள்ளிட்ட வற்றை உடைத்து பீரோவில் இருந்த பூஜைக்கு வைத்திருந்த வெள்ளி பொருட்கள், டிவி, கேஸ் அடுப்பு ,உள்ளிட்ட  ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர் . 

இந்நிலையில் காலை வழக்கம் போல் வீட்டை பார்க்க வந்த அமெரிக்க பொறியாளர் அருணாச்சலத்தின் மைத்துனர் சிவகுமார் வீடு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் நாகலட்சுமி, உதவி ஆய்வாளர் மோகன்,உள்ளிட்ட  காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து வீட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close