விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 150கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டைகள் நெய்வேத்தியம் செய்யப்பட்டது !

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 11:33 am
trichy-vinagar-sathurthi-celebration

பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர்சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதிகாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75கிலோ எடை என150கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்பட்டு, விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

பின்னர் கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close