சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மயிலாட்டம், தண்டை மேளத்தோடு மிகப்பெரிய விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் அமைந்துள்ள மிக பெரிய சந்தையான கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகப்பெரிய விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவை ஒட்டி மயிலாட்டம், தண்டை மேளத்துடன், பெருமாள், விநாயகர் வேடமிட்டு ஆடியும் பாடியும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
newstm.in