நடத்துநருடன் காவலர் வாக்குவாதம்: அதிர்ச்சியில் உயிரிழந்த நடத்துநர்!

  அனிதா   | Last Modified : 02 Sep, 2019 05:16 pm
police-dispute-with-conductor-conductor-death-in-shock

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து விருத்தாசலம் அருகே வந்தபோது, காவலராக பணிபுரியும் பழனிவேல் என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து, பேருந்து நடத்துநர் கோபிநாத், பழனிவேலிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறியபோது, காவலர் பழனிவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அப்போது, நடத்துநர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பயணிகள் அவரை எழுப்பிய போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்துநர் நெஞ்சுவலியால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close