கோவை: ரயில் நிலைய பெண் அதிகாரியை கத்தியால் குத்தியவர் கைது!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 11:19 am
coimbatore-a-man-arrested-for-railway-officer-stabbed

கோவை எட்டிமடை ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற நபரை  5 நாட்களில் கைது செய்த தனிப்படை போலீஸாரை டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார். 

கோவை எட்டிமடை ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பணியில் இருந்த அஞ்சனா (28). என்ற பெண் ரயில் நிலைய அதிகாரியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ரயில்வே டி.ஜி.பி சைலேந்திராபாபு உத்தரவின் பேரில், டி.எஸ்.பி எட்வர்டு கண்காணிப்பில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பட்டது. போத்தனூர் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் செல்விராணி, சாந்தி மற்றும் 6 காவலர்கள் கொண்ட தனிப்படையினர், கேரளா மாநிலம் பாலக்காடு, சொரனூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

தொடர்ந்து நேற்று காலை மீண்டும் எட்டிமடை ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரிக்க அழைத்துள்ளனர். ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே தனிப்படை போலீஸார் அவரை துரத்தி மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில் பிடிப்பட்ட நபர் கேரளா மாநில சொரனூர் பகுதியை சேர்ந்த பெரோஸ்கி (36) என்பதும், இவர் எட்டிமடை பகுதியில் வாடகைக்கு குடியிருந்ததும் தெரியவந்தது. மேலும் பெரோஸ்கி மீது கேரளாவில் 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பெரோஸ்கி ரயில்நிலையங்களில் நோட்டமிட்டு பயணிகளிடம் செல்போன், பணம், நகைகளை திருடி சென்று மது குடிப்பதை வழக்கமாக கொண்ட நபர் என்றும், மது குடிக்க பணம் இல்லாததால் எட்டிமடை ரயில் நிலைய பெண் அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டதால் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. ‘

இதையடுத்து, அதிகாரியை குத்திய கத்தியை ரயில்வே தண்டவாள புதரில் இருந்து தனிப்படை பறிமுதல் செய்தனர். ரயில் பயணிகள் தங்களது உடமைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் புகார் அளிக்க 1512 என்ற பிரத்தியேக எண் மற்றும் 99625 – 00500 / 94981 - 01950 என்ற வாட்ஸ்ஆப்  எண்ணில் எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் போத்தனூர் ரயில்வே காவல் ஆய்வாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close