சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 04:14 pm
old-man-arrested-for-sexual-harassment

கோவை சுண்டப்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் சுண்டப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளில் நேற்றைய தினம் சமூக செயற்பாட்டாளர்கள் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வில் "குட் டச்" "பேட் டச்" குறித்த தகவல்களை குழந்தைகளுக்கு பரிமாறிய போது 2 சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சமூக செயற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதில் ஒரு சிறுமிக்கு 11 வயது, மற்றொரு சிறுமிக்கு 9 வயதாகும்.
இதையடுத்து ஆசிரியர்களும் சமூக செயற்பாட்டாளர்களும், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் பெருமாள்சாமி என்ற 72 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பண்ணை வீட்டில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரை சிறையில் அடைத்தனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close