பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 03:26 pm
student-death-on-electric-shock

ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மவாட்டம் உச்சிப்புளியை அடுத்த வலசை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தவர் கார்த்தீஸ்வரன். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த கார்த்தீஸ்வரன், மதிய வேளையில் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, மாணவன் மீது மின்சாரம் தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close