கோவை: வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்!

  அனிதா   | Last Modified : 07 Sep, 2019 10:23 am
coimbatore-a-boy-threatening-to-bomb-a-shopping-complex

கோவை வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

கோவையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வணிக வளாக உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து வணிகவளாக உரிமையாளர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வணிக வளாகத்தில் சோதனை நடத்திய போது, வெடிகுண்டு இருப்பதாக கூறியது புரளி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் வணிக வளாக உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த சிறுவனுடன் ஆஜராகும்படி பெற்றோருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close