ராமநாதபுரம்: நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை!

  அனிதா   | Last Modified : 08 Sep, 2019 01:07 pm
ramanathapuram-144-bans-for-2-months-from-tomorrow

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பிற மாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரை பிற மாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close