கும்பகோணம்: நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடவு!

  அனிதா   | Last Modified : 10 Sep, 2019 09:51 am
kumbakonam-tree-planting-in-municipal-areas

கும்பகோணத்தில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. 

கும்பகோணத்தில் நம்மாழ்வார் நற்பணி மன்றம் மற்றும் நகராட்சி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நகராட்சி மகாமக கலையரங்கம் திருமண மண்டபத்தில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். வேப்பமரம், புங்கைமரம், வில்வமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் சாம்பசிவம் சுகாதாரத்துறை அலுவலர் பிரேமா பொறியாளர் விஸ்வேஸ்வரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் முதற்கட்டமாக  500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close