தலைமை நீதிபதி அமர்வில் இன்றும் வழக்கு விசாரணை இல்லை!

  அனிதா   | Last Modified : 10 Sep, 2019 10:37 am
before-the-chief-justice-session-is-not-in-the-hearing-today

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்றும் வழக்கு விசாரணை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை மேகாலாயா உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜீயம் பரிந்துரை செய்தது. இதையடுத்து நீதிபதி தஹில் ராமனி பணிமாற்றம் வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். ஆனால், மேகாலயாவிற்கு பணிமாற்றம் செய்வது உறுதியானதையடுத்து அவர் தலைமை நீதிபதி பதவியை ராஜினமா செய்தார். 

இதனால், நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரிக்க பட்டியலிடப்பட்ட 75 வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில், இன்றும் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணை இல்லை. தலைமை நீதிபதி விசாரிக்க இருந்த வழக்குகள் நீதிபதி வினித் கோத்தாரி அடங்கிய 2வது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close