நேருக்கு நேர் ஒரே பாதையில் சென்ற ரயில்கள்: ஓட்டுநர்களால் பெரும் விபத்து தவிர்ப்பு

  அனிதா   | Last Modified : 10 Sep, 2019 11:06 am
trains-that-go-face-to-face-on-the-same-path

வேலூர் காட்பாடி அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்ததை கண்டு ரயில் ஓட்டுநர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் சிறப்பு ரயில் இன்று தண்ணீர் நிரப்பிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டது. காட்பாடி அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே புறநகர் பயணிகள் மின்சார ரயில் ஒன்று அதே ரயில் பாதையில் வந்துள்ளது. இதை கண்ட 2 ரயில் ஓட்டுநர்களும் அதிர்ச்சியடைந்து சாமார்த்தியமாக 2 ரயில்களையும் நிறுத்தினர். சுமார் 100 மீட்டர் இடைவெளியில் ரயில்கள் நின்றது. ஓட்டுநர்களின் சாமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து  விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close