சேலத்தில் 48 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 10:16 pm
plastics-seize-in-salem

சேலம் மாநகராட்சியில் எட்டு மாதங்களில் 48 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகர ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

சேலம் மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களில் 48 ஆயிரம் கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடந்த எட்டு மாதங்களில் 4032 கடைகளில் 48,000 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து 30 லட்சத்து 69 ஆயிரத்து 170 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து நான்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இனிப்புகள், உணவகங்கள், பேக்கரிகள், விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளில் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்தில் 948 கடைகளில் 38 ஆயிரத்து 687 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 756 கடைகளில் 969 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், அம்மாபேட்டை மண்டலத்தில் 1,167 கடைகளில் 4,729 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 1,161 கடைகளில் 2,615 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தவர்கள் சுமார் 30 லட்சத்து 69 ஆயிரத்து 170 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினந்தோறும் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதை தடுக்கவும் தொடர்ந்து தணிக்கை மேற்கொள்வார்கள் எனவும் ஆணையாளர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close