சேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 10:27 pm
salem-girl-raped-by-unknown-group

சேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி ஐந்து பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை சேலம் மாவட்ட போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் எம்.ஜி.ஆர் நரிக்குறவன் காலனியைச் சேர்ந்த நடேசன் மகள் சுரேகா(21).  இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் டி.பார்ம் படித்து முடித்து அதே கல்லூரியில் பணியாற்றி வருகிறார்

இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் செந்தமிழ் பாண்டியன் என்பவரும் பழக்கம் ஏற்பட்டு அது நாளைடைவில் காதலாக மாறியது. இவர்கள் காதலர்கள் என்பதால் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

சுரேகாவின் ஊரான அம்மம்பாளையம் நரிக்குறவன் காலனியை சேர்ந்த இளவரசன் மகன் வரதராஜன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட ஐந்து பேர் சுரேகவை பின் தொடர்ந்து, சுரேகா அவரது காதலுடன் தனிமையில் இருந்ததை மறைந்திருந்து வீடியோவை பதிவு செய்து அதை சுரேகாவிடம் காட்டி மிரட்டி ஐந்து பேர் அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
ஐந்துபேர் கொண்ட கும்பல் இந்த வீடியோ பதிவை சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவு சுரேகாவின் அண்ணன் செல்போனுக்கும் போனதாக தெரிகிறது. இந்நிலையில் அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கரிடம் நேற்று புகார் அளித்தனர். 

இந்த புகார் ஆத்தூர் துணை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் ஆத்தூர் போலீசார்  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தீவிர தேடிவருகின்றனர். 

கல்லூரி மாணவியை படம் எடுத்து மிரட்டி ஐந்து பேர் கூட்டு பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close