பேனர் விழுந்து உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க விநோத முறையில் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 08:25 pm
rotest-for-lady-who-dead-for-road-banner

பேனர் விழுந்து பெண் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிடக் கோரி சமூக ஆர்வலர்கள் தலைமைச் செயலர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இ-போஸ்ட் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. 

சென்னையில் ஆளுங்கட்சியினர் சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் விழுந்து இருசக்கரவாகனத்தில் வந்த இளம்பொறியாளர் சுபஸ்ரீ நிலை தடுமாறியதுடன் தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே சென்னையில் பேனர் விழுந்து ரகு என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது சுபஸ்ரீ 2வதாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் செயலுக்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்கிடவும், இதனை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பேனர் கலாச்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி இன்று மாலை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இ-போஸ்ட் அனுப்பினர். தொடர்ந்து இதனை அரசு மற்றும் அரசியல் கட்சியினரிடம் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close