சொத்து பிரச்சனை: கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

  அனிதா   | Last Modified : 14 Sep, 2019 01:35 pm
car-driver-suicide

கும்பகோணம் அருகே சொத்து பிரச்சினை காரணமாக கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் மேலசெம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  கஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மகேந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தாய் சிவகாமி தூக்க மாத்திரை உட்கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமானால் தனது சொத்தை பிரித்து தருமாறு கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரனிடம் வலியுறுத்தி உள்ளார். ஆனால் மகேந்திரன் சொத்தை பிரிக்க மறுத்துவிட்டார் இந்நிலையில் இன்று காலை பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய கஜேந்திரன் பாத்ரூமில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கஜேந்திரனின் மனைவி நந்தினி கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close