தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் நிலைக்கும்: அமைச்சர்கள்

  அனிதா   | Last Modified : 14 Sep, 2019 04:11 pm
only-2-language-policy-will-being-in-tamil-nadu

மாணவர்களின் நலனுக்காகவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை மயிலாப்பூரில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் திறனை மேம்படுத்தவும்,  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுத்தரும் கல்வியின் அளவை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும், இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், இந்த பொதுத்தேர்வுகளுக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 3 ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படும் ஆனால் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி பட்டியல் இருக்காது எனவும், 3 ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பெண் கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மொழித்தாள்கள் 2 ஆக இருந்ததை ஒன்றாக மாற்றுவது மாணவர்களின் நலன் சார்ந்தது என தெரிவித்த அவர், தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் நிலைக்கும். நிலைத்து நிற்கும் என்றும் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் வழியில் இரு மொழிக் கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும் என தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் இந்தி திணிக்க முடியாது எனவும், நவோதயா பள்ளிகள் ஏற்படுத்தினால் மட்டும் தான் மத்திய அரசின் அனுமதியோடு இந்தி திணிக்கப்படும். அப்படி ஏதும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தை பொருத்தவரை நேற்று, இன்று, நாளை எப்போதும் இரு மொழி கொள்கை மட்டும் இருக்கும் என உறுதிபட கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close