கும்பகோணம்; முப்பெரும் மகா கும்பாபிஷேக விழா

  அனிதா   | Last Modified : 16 Sep, 2019 04:06 pm
temple-function-in-kumbakonam

கும்பகோணத்தில் மீனாட்சி அம்மன், வெங்கடாஜலபதி, ருத்ர மகா காளியம்மன் ஆகிய மூன்று திருக்கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். .

கும்பகோணம் அரியதிடலில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடாஜலபதி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ ருத்ரம் மகா காளியம்மன் ஆகிய மூன்று திருக்கோவில்கள் உள்ளது. சிதலமடைந்த கோவிலை கிராமமக்கள் மற்றும் அறக்கட்டளை பணியாளர்கள் இணைந்து புரணமைத்தனர். இங்கு கடந்த 13 ஆம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. 

கடந்த 14ஆம் தேதி யானை, குதிரை, ஒட்டகம்துடன் மேளதாளம் முழங்க அரசலாற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு இன்று நான்கு கால யாகசாலை பூஜையுடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. திருமணமாகாத பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி நினைத்த மாதத்திலே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். 

திருப்பதி செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் உள்ள வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயாரே ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வயிற்றில் வலி ஏற்பட்டால் சாப்பிட முடியாதவர்கள் ஜீரணசக்தி இல்லாதவர்கள் போன்றவர்கள் இக் கோயிலில் அன்னதானம் செய்தால் நிரந்தரத் தீர்வு ஏற்படும்.

கண்எரிச்சல் கண்ணில் நீர்கசிவு கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மை மனநிம்மதியின்மை போன்ற வியாதிகளுக்கு இக்கோயில் உள்ள ருத்திரமகாகாளியம்மன் வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close