போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 07:57 pm
one-killed-and-one-injured-after-police-chase-truck

திருச்சியில் காவல்துறையினர் லாரியை துரத்தியதால் தாறுமாறாக ஓடிய லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 32). இவர் பொன்னகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கார்த்திகேயன் இன்று தனது இரு சக்கர வாகனத்தில், தென்னூர் கோஹினூர் தியேட்டர் சிக்னல் அருகே இடது புறம் திரும்பிய போது, அங்கு காவல்துறையினர் லாரியை விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்களிடம் தப்பிக்க லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனத்தை முந்திச் சென்றார். அப்போது லாரியின் டயர்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்திற்கு முழுப்பொறுப்பு காவல்துறையினர் மட்டுமே. இது விபத்தல்ல காவல்துறையினரால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.  

இதுகுறித்து தகவலறிந்த தில்லைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு, லாரி ஓட்டுனர் தர்மபுரியை சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close