முசிறி அருகே தெருவுக்குள் புகுந்த வாய்க்கால் தண்ணீர்; பொதுமக்கள் அவதி

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 10:56 pm
trichy-sevege-water-flowing-in-street

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோடியாம்பாளையம் கிராமத்தில் தெருக்களில் வாய்க்கால் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தொட்டியம் தாலுகா, மணமேடு அருகே கோடியாம்பாளையம் அமைந்துள்ளது. இதன் அருகே காவிரி ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வட கரை  வாய்க்கால் செல்கிறது.

இந்த வடகரை வாய்க்காலில் இருந்து தண்ணீர் கோடியம்பாளையத்தில் உள்ள மூன்று தெருக்களில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறும்போது, வாய்க்கால் தண்ணீர் புகுந்தால் பெரும் சிரமமாக உள்ளது. பாம்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. வாய்க்காலில் குப்பைகள் தேங்கி அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு தெருக்களில் தண்ணீர் வந்துள்ளது.

இதனை பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும் . இப்பகுதியில் வசிப்போருக்கு இதே நிலை நீடித்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது .மேலும் நெசவாளர்கள்  பாவு சரி  செய்யுமிடத்தில்  தண்ணீர் தேங்கி நிற்பதால்  நெசவு தொழில் மேற்கொள்ள முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close