சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் நாளை முதல் தொடர் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 10:55 pm
salem-periyar-university-protest-from-tomorrow

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தமிழக ஆளுநர் தலையிட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி தெரிவித்துள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல்  இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை களைய துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

இருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் தங்களை அழைத்து பேசி சில குறைகளைத் தவிர மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துவிட்டு இதுவரை தங்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல் நிர்வாகம் அலைக்கழிக்கிறது. பலமுறை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தியும் துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாளை முதல் தொடர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார். 

இதன்படி நாளை முதல் கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற உள்ளதாகவும், நாளை மறுநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்த அவர் வரும் 23 ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி கூறும்போது, பெரியார் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்கு அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆதரவு அளிப்பதாகவும், நிர்வாகத்தின் சர்வாதிகாரியாக துணை வேந்தர் செயல்படுவதாக தெரிவித்த அவர் பல்கலைக்கழக கோப்புகளை தொடர்புடையவர்களே திருடி உள்ளதாக குற்றம்சாட்டினார். 

மேலும் பேராசிரியர் அங்கமுத்து தற்கொலைக்கு விசாரணை குழு அமைத்து விசாரிக்க தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய அவர் தற்போது பல்கலைக் கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியாகி உள்ளதால் துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close